கர்த்தரே உனக்கு வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம் (ஏசாயா 60:20)

வாலிபர் ஊழியம்

இயேசு விடுவிக்கிறார் வாலிபர் ஊழியத்தைப் பற்றி...

வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்... சங். 119:9

இளம் தலைமுறை இயேசுவுக்கே

"இயேசு விடுவிக்கிறார்" ஊழியமானது எல்லா நிலைகளிலுள்ள மக்களைச் சந்திக்கும் ஊழியமாகும்.சுருங்கச் சொன்னால்,"கருவரை முதல்,கல்லறை செல்கிற வரை..." அனைவரையும் சந்திக்கிறது.

இதில்,வாலிபர் ஊழியம் பிரத்தியேகமானது! வாலிபர்களைக் குறித்து,இயேசுவே சகோதரர் அவர்களிடம் நேரில் பகிர்ந்து கொண்டபோது,சகோதரர் அவர்கள் மிகுந்த பாரத்தொடு இதற்காகப் பிரயாசப்படுகையில்,சகோதரி ரோஸ்லின் ரெக்ஸ் அவர்களை கர்த்தர் இதற்கென்று பிரதிஷ்டை செய்து கொண்டு வந்தார்.

அதற்குப் பின் திருச்சி,கோவை,நாகர்கோவில்,தூத்துக்குடி,திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் வாலிபர் ஊழியங்களைப் பொறுப்பாகக் கவனிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டு,வாலிபர் ஊழியம் வெகு வேகமாய் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ம் தேதி வாலிபர் கொண்டாட்டம் நாலுமாவடியில் வைத்து நடைபெற்று வருகிறது.
மாதமொருமுறை நடைபெறும் Synergia கூடுகை (சென்னை, கோவை,திருச்சி, நாகர்கோவில், திருநெல்வேலி, மார்த்தாண்டம், நாலுமாவடி)வாலிபர்களைக் கர்த்தருக்குள் பெலப்படுத்துகிறது.
தென்னிந்தியாவில் ஆரம்பித்த "Hello Chennai" போன்ற வாலிபர் கூடுகைகள் தற்சமயம் "Hello Mumbai" வரை நடைபெற்று வருகிறது.இதன் மூலம் ஆயிரக்கணக்கான வாலிபர்களை நாங்கள் தேவனண்டை வழிநடத்த உதவுகிறது.
"Mount Sinai" ஒரு நாள் உபவாச ஜெபம்,சென்னையில் ஆரம்பித்து,2011ல் கோவை,திருச்சி,கன்னியாகுமாரி மற்றும் நாலுமாவடியில் நடத்த தேவன் கிருபை செய்தார்.
"இயேசுவின் சிநேகிதன்' என்ற வாலிபர்களுக்கான ஜெபத்திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 7,000 வாலிபர்கள் பதிவு செய்துள்ளனர்.

பயிற்சிகள்:-

தன்னார்வத் தொண்டு செய்ய வாலிபர்கள் தூத்துக்குடி,திருச்சி,நாகர்கோவில்,கோவை மற்றும் சென்னையில் நூற்றுக்கணக்கில் இவ்வுழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாலிபர்களுக்கென்று நாலுமாவடியில் ஊழியப் பயிற்சி அளிக்கப்பட்டது.இதுவே கர்த்தருக்கென்று வாலிபர்கள் ஒரு சேனையாய் எழும்ப ஆரம்பமாயிருந்தது.

'வாலிபர் உலகம்' பத்திரிக்கை:-

தமிழில் வெளிவரும் இம்மாதப் பத்திரிக்கையானது,தேவன் விரும்பும் தேசத் தலைவர்களை அவனியெங்கும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டது.

சுமார் 10,000 பத்திரிக்கைகள் வெளிவருகிறது.

வெகு விரைவில் ஆங்கிலத்தில் வெளிவர உள்ளது.ஜெபித்துக் கொள்ளுங்கள்.வாலிபர்களுக்கென்று ஆலோசனை மையம் அம்பத்தூர் கிளை அலுவலகத்தில் செயல்படுகிறது.வாலிபர் ஊழியப் பிரிவின் கீழ் இயங்கும் துறை:

விளையாட்டுத் துறை:

கைப்பந்து,கால்பந்து மற்றும் கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை கல்லூரி மற்றும் பள்ளி மாணவ,மாணவரிடையே,ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவிலும் தனித்தனியாக நடத்துவது மட்டுமல்லாமல்,இயேசுவைப் பற்றி அவ்விளையாட்டு வீரர்கள் அறிய வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலானோர் இயேசுவால் தொடப்படுகின்றனர்.

24 மணி நேர ஜெப உதவிக்கு

 • ஜெபத்திற்கு : (+91) 04639-22 00 00
 • அலுவலகம் : (+91) 04639-22 00 22
 • தொலைநகல் : (+91) 04639-22 00 33
 • மின்னஞ்சல்
 • ஜெபத்திற்கு : prayer@jesusredeems.com
 • தொடர்புக்கு : info@jesusredeems.com
 • பங்காளர் : partnerscare@jesusredeems.com

பார்வையாளரின் எண்ணிக்கை

 • இன்று : 57
 • நேற்று : 80
 • இந்த மாதம் : 18568
 • மொத்தம் : 191288

எங்களிடம் 2 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

பின் தொடர்க