கர்த்தரே உனக்கு வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம் (ஏசாயா 60:20)

பெண்கள் ஊழியம்

இயேசு விடுவிக்கிறார் பெண்கள் ஊழியத்தைப் பற்றி...

தெபோராளாகிய நான் எழும்புமளவும்... கிராமங்கள் பாழாயின... நியா. 5:7

இன்றைய சமுதாயத்தில்,குடும்பங்களுக்குள்ளே பிசாசானவன் பலமாய் கிரியை செய்வதினால் குடும்பங்கள் உடைந்தும், சிதைந்தும்,நலிவுற்றும் காணப்படுகிறது.விசேஷமாக,கிறிஸ்தவக் குடும்பங்கள் சத்துருவின் கண்ணிகளில் சிக்கியிருப்பதைக் காணும்போது,"இயேசு விடுவிக்கிறார்" ஊழியங்கள் மூலம் குடும்பங்களைக் கட்டியெழுப்பும்படி,அதிலும் பெண்கள் புது வாழ்வு அடையும்படி,அவர்களுக்காக,பிரத்தியேகமாக கர்த்தரால் ஏற்படுத்தப்பட்டதுதான், 'பெண்கள் ஊழியம்'.இதற்கென்றே சகோதரி. ஜாய்ஸ் லாசரஸ் அவர்களை தேவன் அபிஷேகித்து,இந்த ஊழியத்தில் வல்லமையாகப் பயன்படுத்தி வருகிறார்.

இப்பெண்கள் ஊழியம் தமிழ்நாடு மட்டுமல்ல,சிங்கப்பூர்,மலேசியா,இலங்கை போன்ற தேசங்களிலும் நடைபெறுகிறது.மேலும்,எங்கெல்லாம் விடுதலைப் பெருவிழாக்கள் நடைபெறுகிறதோ,அங்கெல்லாம் விசேஷித்த பெண்கள் ஊழியம் உண்டு.சகோதரி.ஜாய்ஸ் லாசரஸ் அவர்கள் கூட்டம் முடிந்ததும் தேவைப்படுவோர்க்கு தனித்தனியாக ஆலோசனைகள் வழங்கி,ஜெபிப்பார்கள்.

பெண்கள் புது வாழ்வு முகாம்கள் அநேகம் இவர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இதன் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர்.உடைந்த எத்தனையோ குடும்பங்கள் இதன் மூலம் கட்டப்பட்டுள்ளன.

இக்காலக் கட்டத்திலே,மிகவும் அத்தியாவசியமான இவ்வூழியத்திலே,தேவன் சகோதரி. ஜாய்ஸ் லாசரஸ் அவர்களை இன்னும் புதிய அபிஷேகத்தை,புதிய கிருபையை,புதிய பெலனைக் கொடுத்து பயன்படுத்த ஜெபித்துக் கொள்ளுங்கள்.

24 மணி நேர ஜெப உதவிக்கு

 • ஜெபத்திற்கு : (+91) 04639-22 00 00
 • அலுவலகம் : (+91) 04639-22 00 22
 • தொலைநகல் : (+91) 04639-22 00 33
 • மின்னஞ்சல்
 • ஜெபத்திற்கு : prayer@jesusredeems.com
 • தொடர்புக்கு : info@jesusredeems.com
 • பங்காளர் : partnerscare@jesusredeems.com

பார்வையாளரின் எண்ணிக்கை

 • இன்று : 57
 • நேற்று : 80
 • இந்த மாதம் : 18568
 • மொத்தம் : 191288

எங்களிடம் 2 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

பின் தொடர்க