கர்த்தரே உனக்கு வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம் (ஏசாயா 60:20)

ஜெப ஊழியம்

ஜெபமே பிரதானம்...

நமது 'இயேசு விடுவிக்கிறார்' ஊழியத்தின் முதுகெலும்பே ஜெபம்தான்! அதிலும் பிரத்தியேகமாக,அழிந்து கொண்டிருக்கிற ஆத்துமாக்களுக்காக ஜெபிப்பதே இந்த ஊழியத்தின் பிரதான நோக்கமாகும்.

இதற்கென்று ஜெபிக்கிற 7 தேவப் பிள்ளைகள் நியமிக்கப்பட்டு, தேசத்திற்காக,ஊழியங்களுக்காக,திருச்சபைகளுக்காக அனுதினமும் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 1978ம் வருடம் ஜுன் மாதம்,நமது சகோதரர் அவர்கள்,ஒருநாள் வனாந்தரத்தில் தேவ சமூகத்தில் தனித்து ஜெபித்துக் கொண்டிருந்தபோது,கர்த்தர் அவருக்குக் கொடுத்த தரிசனத்தின் மூலமாக,செய்யப்பட வேண்டிய ஊழியத்தின் காரியங்களைக் குறித்து ஆவியானவர் அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.

"ஆண்டவரே,இவ்வளவு பெரிய காரியங்களைச் செய்ய எனக்குப் போதிய ஞானமில்லை...பெலனில்லை..."என்று சொல்லி,நமது சகோதரர் அவர்கள் தேவ சமூகத்தில் கதறியழுது ஜெபித்தபோது,கர்த்தர் நமது சகோதரரோடு இடைப்பட்டு,அவர்களோடு இணைந்து ஜெபிக்க ஜெபக்குழுவை ஏற்படுத்துமாறு திருவுளம்பற்றினார்.

கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்படிந்து கடந்த 1978ம் வருடம், அக்டோபர் 2ம் தேதி நாலுமாவடியில் ஒரு சிறிய வீட்டில்,'இயேசு விடுவிக்கிறார்' ஊழியமானது ஒரு ஜெபக் குழுவாக ஆரம்பிக்கப்பட்டது.அந்த ஆரம்ப நாட்களில், நாலுமாவடியைச் சேர்ந்த சில தாய்மார்களும்,சகோதரர்களுமாக தினமும் கூடி இந்தியாவின் எழுப்புதலுக்காக,எல்லா ஊழியர்களுக்காக,ஊழியங்களுக்காக, மிஷனெரிகளுக்காக,தேவைகளோடிருக்கிற மக்களுக்காக ஜெபித்து வந்தார்கள்.எந்த விதமான சபைப் பாகுபாடில்லாமல் ஜெபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட இந்த,'இயேசு விடுவிக்கிறார்' ஜெபக்குழு தான்,இன்றுஒரு ஆலமரம்போல செழித்து.பெரிய அளவில்,'இயேசு விடுவிக்கிறார்' ஊழியமாக வளர்ந்துள்ளது.இதற்குக் காரணம்! ஜெபம்! ஜெபம்! ஜெபம்!

 • வியாழன் தோறும் 11:30 மணிமுதல், 3:00 மணிவரை தேசத்திற்காக ஜெபிக்கிற உபவாச ஜெபம்.
 • ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமையன்று சுமார் 40,000 தேவப் பிள்ளைகளும்,அநேக தேவ ஊழியர்களும் கூடி உபவாசத்தோடு தேசத்திற்காக, மிஷனெரிகளுக்காக, ஊழியங்களுக்காக ஜெபிக்கிற திறப்பின் வாசல் ஜெபம்.
 • ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை இரவு 9:00 மணிமுதல்,அதிகாலை 5:00 மணிவரை தேசத்திற்காக, மிஷனெரிகளுக்காக, ஊழியங்களுக்காக முழு இரவு ஜெபம்.
 • ஒவ்வொரு நாளும் குழுவாக ஆண்களும், பெண்களும் தனித்தனியாகவும் மற்றும் கூடியும் உபவாசத்தோடு தேசத்திற்காக, மிஷனெரிகளுக்காக, ஊழியங்களுக்காக ஜெபிக்கிற ஜாமக்காரன் ஜெபம்.
 • சாத்தானின் அரண்களை நிர்மூலமாக்க,நடு இரவு ஜெபிக்கிற ஜெப வீரர்களின் ஜெபம்

என்று,பலவிதங்களில் ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், நமது சகோதரர் அவர்களை பிரத்தியேகமாக ஜெபத்தில் தாங்கக் கூடியவர்கள்தான்,'ஜெப சேனை' ஜெப வீரர்கள்.இவர்கள் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளி,அதாவது திறப்பின் வாசல் ஜெபத்திற்கு முந்தின நாள் கூடி,நாலுமவடி-தேவனுடைய மாளிகையில் வைத்து ஜெபிக்கிறார்கள்.

'தேசத்தை வசனத்தால் நிரப்புங்கள்...' மற்றும்,'தேசத்தை ஜெபத்தால் மூடுங்கள்..' என்ற தேவ கட்டளையின்படி,இதுவரை தமிழ்நாடு முழுவதும் உள்ள எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் நமது ஊழியத்தைச் சேர்ந்த,சகோ.பால் புருஷோத்தமன் அவர்கள் தலைமையில்,குழுவாக ஜெப நடை நடத்தப்பட்டது.பகலில் உபவாசத்தோடு ஜெப யாத்திரை செய்து விட்டு,மாலை 6:00 மணிமுதல் 9:00 மணிவரை அந்தந்த மாவட்டத் தலைநகரங்களிலுள்ள மக்கள் மற்றும் திருச்சபையினர் கூடி உபாவசத்தோடு அந்தந்த மாவட்டத்திற்காக ஜெபித்தார்கள்.

கர்த்தர் உரைத்த,'தேசத்தை வசனத்தால் நிரப்புங்கள்...ஜெபத்தால் மூடுங்கள்!' என்ற வார்த்தைக்குக் கீழ்படிந்ததால்,'ஆசீர்வாதமான தமிழ்நாடு' மலர கர்த்தர் கிருபை செய்தார்.இதன் விளைவாக,இந்த 2012ம் ஆண்டை ஜெப ஆண்டாகக் கர்த்தர் அறிவித்து,தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்ட தலைநகரங்களிலும்12 மணி நேர உபவாச ஜெபத்தை ஆரம்பித்து நடத்தக் கர்த்தர் உதவி செய்து வருகிறார்.

இவ்வாறாக,மிக அற்பமாக ஆரம்பிக்கப்பட்ட,'இயேசு விடுவிக்கிறார்' ஜெப ஊழியமானது,இன்று தேசத்தையே அசைக்கிற ஆணி வேராய் கர்த்தருக்குள் நிற்க,தேவன் பாராட்டி வருகிற கிருபைகளை நினைத்து,தேவனுக்கு உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி சொல்கிறோம்.


24 மணி நேர ஜெப உதவிக்கு

 • ஜெபத்திற்கு : (+91) 04639-22 00 00
 • அலுவலகம் : (+91) 04639-22 00 22
 • தொலைநகல் : (+91) 04639-22 00 33
 • மின்னஞ்சல்
 • ஜெபத்திற்கு : prayer@jesusredeems.com
 • தொடர்புக்கு : info@jesusredeems.com
 • பங்காளர் : partnerscare@jesusredeems.com

பார்வையாளரின் எண்ணிக்கை

 • இன்று : 69
 • நேற்று : 62
 • இந்த மாதம் : 20060
 • மொத்தம் : 194662

எங்களிடம் 4 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

பின் தொடர்க