கர்த்தரே உனக்கு வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம் (ஏசாயா 60:20)

மிஷனெரி ஊழியம்

இயேசு விடுவிக்கிறார் மிஷனெரி ஊழியத்தைப் பற்றி...

அனுப்பப்படாவிட்டால் எப்படி பிரசங்கிப்பார்கள்? ரோமர் 10:15

" இந்தியர்கள் இரட்சிக்கப்பட ,ஜெபித்தால் மட்டும் போதாது .சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும் .அதற்காக மிஷனெரிகள் அனுப்பப்பட வேண்டும் " என்று ஆவியானவர் பலமாக ஏவினதினிமித்தம் தோன்றியதுதான்..."இயேசு விடுவிக்கிறார்" மிஷனெரி ஊழியம்!

முதல் மிஷனெரி - Bro. John Paul Danasingh
1987 - ஜனவரி திறப்பின் வாசல் ஜெபத்தில் முதல் மிஷனெரிப் பிரதிஷ்டை.


இன்று...

37 ஸ்தாபனங்கள் மூலம் 150 மிஷனெரிகள் தாங்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் ஒரு மிஷனெரிக்கு Rs.2,500/- வழங்கப்படுகிறது.ஆக,மொத்தம் Rs.3,50,000/- இவ்வூழியத்திற்கு செலவிடப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் இம்மிஷனெரிகளின், 'report' இந்த ஸ்தாபனங்கள் மூலம் கிடைக்கப் பெற்று,மிஷனெரிகளைத் தாங்குபவர்களுக்கு அனுப்பப்படுகிறது.
வட இந்தியாவில் குஜராத்,ராஜஸ்தான் மற்றும் 'Shalom' ஊழியங்களை பெரிதளவில் தாங்கி வருகிறோம்.
'பீல்' ஆதிவாசிகள் மத்தியில் ஊழியங்கள் செய்து வரும் 'Shalom' ஸ்தாபனத்தின் மூலம் 100 ஆலயங்களுக்கும் மேலாக ஆலயம் இல்லாத இடத்தில் ஆலயங்கள் கட்டி இருக்கிறோம்.
ஒவ்வொரு வருடமும் சகோதரர் அவர்கள் நேரில் சென்று,இந்த வட இந்தியா ஊழியங்களை,ஆலயங்களைப் பார்வையிடுவார்கள்.ஊழியர்களைச் சந்தித்து,உற்சாகப்படுத்தி வருவார்கள்.
அச்சமயங்களில் திறந்த வெளிக் கூட்டங்கள் நடத்தப்படும்.அநேகர் இயேசுவை ஏற்றுக் கொள்வார்கள்.சபையில் இணைந்து கொள்வார்கள்.
கடந்த 2011 ஜூன் மாதம் Shalom ஸ்தாபன சுதேச ஊழியர்களின் 24 குடும்பங்களுக்கு விசேஷ ஊழியப்பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியின் நோக்கம் 5 வருடத்தில் 10 லட்ச 'பீல்' மக்களைக் கர்த்தருக்குள் வழி நடத்துவது.

(உங்கள் குடும்பத்தின் சார்பாக ஒரு ஆலயத்தைக் கட்டி கொடுக்க நீங்கள் முன் வரலாம்.ஆலயம் கட்டி முடித்ததும் உங்களுக்கு அதன் விபரங்கள் அனுப்பி வைக்கப்படும்.)

ஆரம்பத்தில் கால்நடையாய் சென்று ஊழியம் செய்தவர்களுக்கு,இரண்டு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வூழியத்திலும், இவ்வூழியத்தின் ஆசீர்வாதத்திலும் உங்களுக்கு ஒரு பங்கு வேண்டுமா?

1 மிஷனெரியைத் தாங்குவதற்கு மாதம் - Rs.2,500/-

1 மிஷனெரி குழந்தையை தாங்குவதற்கு மாதம் - Rs.700/-

இரண்டு சக்கர வாகனம் - Rs.45,000/-

சைக்கிள் - Rs.3,500/-

ஒரு வேதாகமம் - Rs.100/-

ஒரு ஆலயம் கட்ட - Rs.2 லட்சம்

இம்மிஷனெரி ஊழியங்களைத் தாங்க முன் வாருங்கள்!  

ஆசீர்வதிக்கப்படுங்கள்!

24 மணி நேர ஜெப உதவிக்கு

 • ஜெபத்திற்கு : (+91) 04639-22 00 00
 • அலுவலகம் : (+91) 04639-22 00 22
 • தொலைநகல் : (+91) 04639-22 00 33
 • மின்னஞ்சல்
 • ஜெபத்திற்கு : prayer@jesusredeems.com
 • தொடர்புக்கு : info@jesusredeems.com
 • பங்காளர் : partnerscare@jesusredeems.com

பார்வையாளரின் எண்ணிக்கை

 • இன்று : 69
 • நேற்று : 62
 • இந்த மாதம் : 20060
 • மொத்தம் : 194662

எங்களிடம் 4 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

பின் தொடர்க