கர்த்தரே உனக்கு வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம் (ஏசாயா 60:20)

கடித ஊழியம்

இயேசு விடுவிக்கிறார் கடித ஊழியத்தைப் பற்றி...

ஆற்றவும்... தேற்றவும்......

உலகத்தின் பல பகுதிகளிலிருந்து துன்பத்திலும்,துயரத்திலும்,பிரச்சனைகளிலும்,பாடுகளிலும்,கவலையிலும்,கண்ணீரிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் எண்ணற்ற மக்கள்,தங்களுடைய விண்ணப்பங்களை கடிதங்களில் எழுதி ஜெபிக்கக் கேட்கிறார்கள்.

அவர்களுக்கு (ஜெபத்தோடும்,தேவ ஒத்தாசையோடும்) தேவ ஆலோசனைகளை வழங்குவதுதான் கடித ஊழியம்.

இதை சகோதர் அவர்கள், சில வருடங்கள் தனியாகச் செய்து வந்தார்கள்.அநேகருடைய காயங்களை ஆற்றி,அநேகக் குடும்பங்களைக் கட்டியெழுப்பியுள்ள இக்கடித ஊழியத்திலுள்ள தேவப்பிள்ளைகள்,கடிதங்கள் வந்தவுடன் அவைகளை தேவ சமூகத்தில் வைத்து,கருத்தாய் பிரார்த்தனை ஏறெடுக்கிறார்கள்.உடனுக்குடன் (ஜெபத்தோடும்,தேவ ஒத்தாசையோடும்) கர்த்தர் தருகிற பதில்களை அனுப்பி வருகிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் 30,000 த்திலிருந்து 35,000 வரை கடிதங்கள் ஜெபத்திற்காக வருகின்றன.
ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை நடைபெறுகிற "திறப்பின் வாசல் ஜெபத்தில்" சுமார் 15,000க்கும் அதிகமான கடிதங்கள் வருகிறது.
திறப்பிலே நின்று ஜெபிக்கிற சகோதரருக்கு,கர்த்தர் தருகிற வாக்குத்தத்தம் கடிதம் மூலம் ஜனங்களுக்குத் தெரியப்படுத்தப்படுகிறது.
E-MAIL, FAX, SMS மூலமும் ஜெபக் குறிப்புகள் கிடைக்கப் பெறுகிறோம்.பதில்கள் உடனுக்குடன் அனுப்பப்படுகிறது.எண்ணிக்கைக்கு அடங்காதோர் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஏறக்குறைய 50 நாடுகளில் உள்ள தேவப் பிள்ளைகள் அநேகர் இக்கடித ஊழியத்தின் மூலமாக ஆசீர்வாதத்தை அனுபவித்து வருகிறார்கள்.
விஞ்ஞான வளர்ச்சியின் பரிமாணத்தின்படி FACEBOOK மூலம் அநேக வாலிபர்கள் எங்களை அணுகுகின்றனர்.
தமிழ்,ஆங்கிலம் மட்டுமல்லாமல்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் கடிதங்களுக்கும்,நமது சகோதரனுடைய ஜெபத்திற்குப் பின்,அந்தந்த மொழிகளிலேயே பதிலைப் பெற்றுக் கொள்ள ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கை கொண்ட பக்கங்களையுடைய கடிதங்கள் அனுப்பும் பழக்கம் மறக்கப்பட்டு வரும் இந்த SMS காலகட்டத்தில், எதிர்பார்ப்போடு தங்கள் உள்ளக்கிடக்கையைக் கொட்டி விடும் கடிதங்களுக்கு,அபிஷேகத்தோடு தேவ வார்த்தையை அனுப்பும் பணியிலுள்ள கடித ஊழியமானது,கர்த்தர் ஒருவருக்கே மகிமையும்,கனத்தையும் செலுத்தக் கூடிய ஒன்றாகத் திகழ்கிறது!

24 மணி நேர ஜெப உதவிக்கு

 • ஜெபத்திற்கு : (+91) 04639-22 00 00
 • அலுவலகம் : (+91) 04639-22 00 22
 • தொலைநகல் : (+91) 04639-22 00 33
 • மின்னஞ்சல்
 • ஜெபத்திற்கு : prayer@jesusredeems.com
 • தொடர்புக்கு : info@jesusredeems.com
 • பங்காளர் : partnerscare@jesusredeems.com

பார்வையாளரின் எண்ணிக்கை

 • இன்று : 57
 • நேற்று : 80
 • இந்த மாதம் : 18568
 • மொத்தம் : 191288

எங்களிடம் 2 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

பின் தொடர்க