கர்த்தரே உனக்கு வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம் (ஏசாயா 60:20)

ஊழியர்களின் வாழ்த்து

இயேசு விடுவிக்கிறார் ஊழியர்களின் வாழ்த்து...

ஊழியர்களின் வாழ்த்து

சகோதரர் அவர்கள் எங்களுடைய எல்லா இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு பெறுகிறவர், உதவியும் செய்கிறவர். எங்களுக்கும் கர்த்தருடைய வார்த்தையை அவ்வப்போது அறிவித்து உற்சாகப்படுத்துவார். என்னுடைய கடந்த பிறந்த நாளைக்கு இரண்டு நாள் முன்பாக சகோதரர் அவர்களை ஜெபிக்கும்படி என் தந்தை அழைத்திருந்தார்கள். சகோதரர் அவர்கள் வந்து தேவனுடைய வார்த்தையை அறிவித்த போது என் தந்தை பேரானந்தம் அடைந்தார். நேர்மையான வாழ்க்கையும், எல்லா ஊழியரையும் நேசிக்கும் ஆவியைத் தரித்து, கடந்த 30 வருடங்கள் சகோதரர் அவர்கள் கர்த்தரால் உபயோகப்படுத்தப்பட்டு வருவதற்காக ஆண்டவரை மகிமைப்படுத்துகிறேன். தொடர்ந்து ஆண்டவருடைய கரம் அவர்களை வழிநடத்தும்படியாகவும், பராமரிக்கும்படியாகவும் அவர்களுக்காக ஆண்டவரிடம் ஜெபிக்கிறேன். அவர்கள் ஜெபத்திற்காகவும், அன்பிற்காகவும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

Dr. பால் தினகரன்
இயேசு அழைக்கிறார்

1978ம் ஆண்டு சிறிய ஜெபக்குழுவாகத் துவங்கி இன்றைக்கு ஆலமரம் போல் வளர்ந்து விரிந்து தேவ நாமத்திற்கு மகிமையை சேர்த்திருக்கிறது. அர்லேலூயா! நமது தாய்த் திருநாட்டிலும் மற்றும் உலகமெங்கிலும் இலட்சேõபலட்ச மக்களுக்கும் பெரும் ஆசீர்வாதத்தைக் கொண்டு வந்திருக்கிறது. சிறுவர், வாலிபர், பெரியவர், குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் சகோ, மோகன் சி. லாசரஸ் மற்றும் அவர்கள் குழவினர் மூலமாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றனர். விடுதலைப் பெருவிழாக் கூட்டங்கள், திறப்பின் வாசல் ஜெபம், குடும்ப முகாம், வாலிபர் கொண்டாட்டம், சிறுவர் முகாம், தொலைக்காட்சி ஊழியம் மற்றும் பாடல் குறுந்தகடுகள், இலக்கியம் ஆகிய அணுகுமுறைகளின் மூலம் தேவன் ஒரு பெரிய சரித்திரத்தையே உருவாக்கியிருக்கிறார். கடைசி இந்தியன் கல்வாரி மேட்டினில் முழங்கால் படியிடும் வரையிலும் இத்திருப்பணி தொடர நண்பர் சுவிசேஷ குழு என்னும் வளரும் மிஷனெரி குடும்பத்தின் சார்பில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களையும் அதின் நிறுவனம் எனது அண்ணன் மோகன் சி. லாசரஸ் அவர்களையும் அவர்களுடன் இணைந்து பணி செய்யும் சகோதர, சகோதரிகளையும் உளமாற வாழ்த்துகிறேன்.

Rev. யூ. ஜான் கிருபாகரன்
நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு

இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் 30 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது என்று ஆண்டவரை துதிக்கிறேன். இவ்வூழியத்தின் மூலம் தொடப்பட்ட இலட்சக்கணக்கான ஆத்துமாக்களுக்காக ஆண்டவரை மகிமைப்படுத்துகிறேன். ஆத்தும பாரமும், ஜெப ஆவியும் கொண்ட உங்கள் ஊழியம் இந்திய திருச்சபை வரலாற்றில் மாபெரும் ஏழுப்புதலை கொண்டு வந்துள்ளது. இனி வரும் நாட்களில் கோடிக்கணக்கான மக்களுக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களையும், உங்களையும் ஆசீர்வாதமாக கர்த்தர் நடத்த வேண்டும் என்பதே என்னுடைய ஜெபமும் வாழ்த்துக்களும்.

சகோ. G.P.S. ராபின்சன்
இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்

அருமை தம்பி மோகன் சி. லாசரஸ் அவர்கள் ஊழியத்திற்கு வருவதற்கு முன்பே நான் அவரை அறிந்திருக்கிறேன். இன்றைக்கு அநேக ஊழியர்கள் துவக்கத்தில் ஒரு மாதிரியிருக்கிறார்கள். ஆனால் வளர்ந்த பிறகு வேறு மாதிரி ஆகிவிடுகிறார்கள். ஆனால் தம்பி ஆரம்பத்தில் எந்தவித தாழ்மை உள்ளத்துடன் இருந்தாரோ அதே விதமாகத்தான் இன்றும் இருக்கிறார். இத்தகைய பண்பை, எல்லா ஊழியக்காரர்களும் அவரிடத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

பாகவதர். வேதநாயகம் சாஸ்திரியார்
சென்னை

எளிமையான முறையில் ஆரம்பிக்கப்பட்ட இயேசு விடுவிக்கிறார் ஊழியம் இன்று கண்டுள்ள எல்லையில்லா வளர்ச்சிக்காக மிகவும் பெருமையும், சந்தோஷமும் அடைகிறேன். அன்பு சகோதரன் தேவனுக்குப் பிரியமான ஊழியர். அவருக்குள் காணப்படும் தேவ அன்பு, ஆத்தும பாரம், ஊழியத்தில் காணப்படும் அர்ப்பணம் என்னை மிகவும் கவர்ந்தது. நமது ஆண்டவரின் இதய விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் ஊழியர் இவர்.

பாஸ்டர். வின்சென்ட் சகோதரி. ஹெலன் வின்சென்ட்
கிங் ஆஃப் குளோரி சர்ச் - சிங்கப்பூர்

நமது அன்பு சகோதரன் மோகன் சி. லாசரஸ் அவர்களின் ஆத்தும பாரமும், மிகப்பெரிய தொலைநோக்கு தரிசனமும், உருக்கமான ஜெபங்களும், கட்டுக் கோப்பான நிர்வாகமும், உண்மையும், கவனமான இயக்கமும் என்னை வெகுவாய் கவர்ந்தது. இந்தியா முழுவதும் கோடிக்கணக்கில் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவும், தேசம் முழுவதும் ஆயிரக்கணக்கான சபைகள் கட்டப்படவும், பலதரப்பட்ட மக்களிடையே ஜெப ஊழிய தாகத்தைத் தூண்டி எழுப்பி விடவும் அன்பு சகோதரர் தன்னை அர்ப்பணித்து ஓய்வின்றி ஊழியம் செய்து வருகிறார். அவருடைய இதய பாரத்தை இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தைக் கட்டும் அவருடைய தெய்வீகத்தையும் நான் கண்டு மிகவும் அகமகிழ்கிறேன். முழு உலக தமிழர்கள் நடுவில் சகோதரர் மிக முக்கிய இடம் பெற்றது மட்டுமல்லாமல் சபை வளர்ச்சிக் கருத்தரங்குகள் மூலம் பல்லாயிரம் தேவ ஊழியக்காரரின் நெஞ்சத்தில் மேன்மையான இடத்தையும் பெற்று வருகிறார். இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் இணைந்து ஊழியம் செய்யும் நூற்றுக்கணக்கான அவருடைய உடன் ஊழியர்கள் மிகவும் உண்மையுடனும், திறமையுடனும் ஒரே தரிசனத்துடனும் ஊழியம் செய்கிறார்கள். இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பங்காளர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை கூறுகிறேன்.

Rev. Dr. I. ரத்தினம்பால்
துதியின் கோட்டை ஊழியங்கள்

அன்பார்ந்த சகோதரர் மோகன் சி. லாசரஸ் அவர்களுக்கு வேர்ல்டு விஷன் இந்தியா அலுவலகத்திலிருந்து எங்கள் இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தங்களது இயக்கத்தின் பணிகள் இந்திய தேசத்தில் 30 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்று வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். தாங்கள் பலவித சமுதான முன்னேற்றப் பணிகளை செய்து வருவதைக் குறித்து உங்களது சமுதாயப் பணிகள் என்ற கட்டுரையின் மூலமாக அறிந்து மிக உற்சாகமடைந்தோம். நீங்கள் தொடர்ந்து இவ்வித சமுதாயப் பணிகளில் ஈடுபாடு கொள்ள உங்களை மனமுவந்து வாழ்த்துகிறோம்.

உங்களுக்காக ஜெபிக்கும்
ஜெயக்குமார் கிறிஸ்டியன்
தேசிய இயக்குநர்
வேர்ல்டு விஷன் இந்தியா

தாயின் கர்ப்பத்திலே சகோதரன் மோகன் சி. லாசரஸ் அவர்களை கர்த்தர் தமக்கென்று தெரிந்து கொண்டு இந்த மகிமையான ஊழியத்தை ஒப்புக்கொடுத்திருக்கிறார். ஒரு பக்கம் வல்லமையான சுவிசேஷகராயும், மறுபக்கம் பெரும் எழுப்புதலை ஏற்படுத்துகிறவராயும் அதேநேரத்தில் ஜெப வீரரைக் கூட்டிச் சேர்த்து ஊக்கமாக மன்றாடி ஜெபத்துக்குள் நடத்தி செல்கிறதுமான ஊழியங்களை செய்து வருகிறார். தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிற ஆண்டவர் சகோ. மோகன் சி. லாசரஸ் அவர்களுக்கு அளவற்ற கிருபைகளைத் தந்து தாங்க வழிநடத்தி வருகிறார். யாராலும் எளிதாக கிட்டிச் சேரும் அளவிற்கு திறந்த மனப் பான்மை கொண்ட அவர் 30 வருடங்களாக கர்த்தரோடு நெருங்கி நடந்திருப்பதை அறிந்து சந்தோஷப்படுகிறேன். இதிலே ஏறக்குறைய 25 ஆண்டுகளாக அவரோடு நெருங்கிப் பழகவும், இணைந்து ஊழியம் செய்யும் கர்த்தர் எனக்கு கிருபை பாராட்டினார்.

சகோ. சாம் ஜெபத்துரை
அன்றன்றுள்ள அப்பம் ஊழியங்கள்

24 மணி நேர ஜெப உதவிக்கு

 • ஜெபத்திற்கு : (+91) 04639-22 00 00
 • அலுவலகம் : (+91) 04639-22 00 22
 • தொலைநகல் : (+91) 04639-22 00 33
 • மின்னஞ்சல்
 • ஜெபத்திற்கு : prayer@jesusredeems.com
 • தொடர்புக்கு : info@jesusredeems.com
 • பங்காளர் : partnerscare@jesusredeems.com

பார்வையாளரின் எண்ணிக்கை

 • இன்று : 57
 • நேற்று : 80
 • இந்த மாதம் : 18568
 • மொத்தம் : 191288

எங்களிடம் 1 விருந்தினர் இணைப்பு நிலையில்

பின் தொடர்க