கர்த்தரே உனக்கு வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம் (ஏசாயா 60:20)

சிறுவர் ஊழியம்

இயேசு விடுவிக்கிறார் சிறுவர் ஊழியத்தைப் பற்றி...

சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்கள் முதன்முதல் செய்த ஊழியம் 'சிறுவர் ஊழியம்'தான்.1979ம் ஆண்டு,அக்டோபர் 2ம் தேதி,நாலுமாவடிக்கு அருகில் உள்ள சுனை என்ற பகுதியில்தான் முதல்சிறுவர் முகாம் நடந்தது.சுமார் 300 பிள்ளைகள் அதில் பங்கு பெற்றனர்.

இன்று:

ஒவ்வொரு வருடமும் அதே அக்டோபர் 2ம் தேதி,சிறுவர் முகாம் நாலுமாவடி வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது.சுமார் 6000 சிறுவர்கள் பங்கு பெறுகிறார்கள்.

சிறுவர்கள்தானே என்று அலசியப்படுத்தாமல் 'சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்' என்று சொன்ன இயேசுவின் வாக்குத்தத்தத்திற்கு இணங்க எவ்விதத்திலெல்லாம் இயேசுவண்டை வழிநடத்த முடியுமா, அவ்விதத்திலெல்லாம் சிறுவர்களை நடத்த தேவன் தந்த திட்டங்கள்:சிறுவர் தொலைகாட்சி நிகழ்ச்சிகள்:

ஒவ்வொரு வாரமும் ஞாயிறுதோறும் 4.00 மணி முதல் 4.30 மணி வரை தமிழன் தொலைகாட்சியிலும் ஒவ்வொரு நாள் மாலையிலும் 6.30 மணி முதல் 7.00 மணி வரை சத்தியம் தொலைக்காட்சி மூலமாகவும் "Jolly time"நிகழ்ச்சி சிறுவர்களுக்காக ஒளிபரப்பப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

 • பொம்மை காட்சிகள்
 • சிறுவர்களின் சாட்சிகள்
 • குறுநாடகங்கள்
 • சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்களின் செய்தியும் ஜெபமும்

பள்ளி ஊழியங்கள்:
பள்ளி நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக விசேஷித்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.வாழ்க்கை போதனைகள் கற்றுக் கொள்கிறார்கள்.

சிறப்பம்சங்கள்

 • பொம்மை காட்சிகள்
 • பொருள் காட்டி கதை சொல்லுதல்
 • வாழ்க்கைப் பாடங்கள்
 • நல் ஒழுக்கநெறிகள்
 • ஜெப வீரராக உருவாகுதல்

சிறுவர் காப்பகங்கள்,ஞாயிறு பள்ளி ஊழியங்கள்:

சிறப்பம்சங்கள்

 • பொம்மை காட்சிகள்
 • சிறுவர்களின் சாட்சிகள்
 • சிறு படக்காட்சிகள்
 • ஜெபக்குழுக்கள் ஏற்படுத்துதல்
 • career counselling

சிறுவர் முகாம்கள்:
இரட்சிப்பு,அபிஷேகம்,மிஷனெரி ஊழிய வாஞ்சை இப்படியாக கர்த்தருக்குள் நிலைத்திருக்க சிறுவர்களுக்கு இம்முகாம்கள் மூலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

சிறுவர் ஜெபக்குழுக்கள்:
இவ்விதமான ஊழியங்கள் மூலம் சந்திக்கப்படுகின்ற சிறுவர்களை ஜெப வீரர்களாய் உருவாக்க வேண்டும் என்பது சகோதரருடைய வாஞ்சை. ஆகவே ஆங்காங்கே சிறுவர் ஜெபக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு சிறுவர்கள் மத்தியில் கூடி ஜெபிக்கும் பழக்கம் உருவாக்கப்பட்டு வருகிறது. கர்த்தர் சிறுவர் ஜெபக்குழுக்களில் பலத்த அற்புதங்களை செய்து வருகிறார்.

சிறுவர் ஜெபமலர்:
ஒவ்வொரு மாதமும் சிறுவர்களுக்கென்று விசேஷமாக ஜெபக்குறிப்புகள் அடங்கிய சிறுவர் ஜெபமலர் வெளியிடப்படுகின்றது.ஒவ்வொரு சிறுவர் ஜெபக்குழுக்களுக்கும் இது அனுப்பி வைக்கப்படுகிறது.தற்போது சுமார்2200பத்திரிக்கைகள் அச்சிடப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

 • வேதாகம நிகழ்வுகள்
 • கார்ட்டூன் கதைகள்
 • ஆறு வித்தியாசங்கள்,குறுக்கெழுத்துப் புதிர்,கேள்விபதில்
 • இயேசுவின் பொன்மொழிகள்
 • தினமும் ஜெபிக்க வேண்டிய ஜெபக்கறிப்புகள்
 • தினமும் வாசிக்க வேண்டிய வேதப்பகுதிகள்

சிறுவர் ஊழியப்பயிற்சி:
சிறுவர்கள் மத்தியில் ஊழியம் செய்ய வாஞ்சையுள்ள வாலிப சகோதரர்களுக்கும்,சகோதரிகளுக்கும் சிறுவர் ஊழியப்பயிற்சி நடத்தப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

 • பாடல்,கதை,வசனம் கற்றுக் கொடுக்கும் முறைகள்
 • சிறுவர்களின் மனநிலை அறிதல்
 • இரட்சிப்பு மற்றும் அபிஷேகத்திற்குள் வழிநடத்துதல்,counselling

வலைத்தளம்:
பிறமொழி பேசும் சிறு பிள்ளைகள் பயனடையும் வகையில் செயல்படுவது www.jollytime.in என்ற வலைத்தளம்

ஜெபியுங்கள்! இச்சிறுவர் ஊழியத்திற்காக!அனுதினமும்!

நீங்களும் பங்காளர் ஆகலாம்!

24 மணி நேர ஜெப உதவிக்கு

 • ஜெபத்திற்கு : (+91) 04639-22 00 00
 • அலுவலகம் : (+91) 04639-22 00 22
 • தொலைநகல் : (+91) 04639-22 00 33
 • மின்னஞ்சல்
 • ஜெபத்திற்கு : prayer@jesusredeems.com
 • தொடர்புக்கு : info@jesusredeems.com
 • பங்காளர் : partnerscare@jesusredeems.com

பார்வையாளரின் எண்ணிக்கை

 • இன்று : 68
 • நேற்று : 62
 • இந்த மாதம் : 20059
 • மொத்தம் : 194661

எங்களிடம் 4 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

பின் தொடர்க